போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.! போச்சு. போச்சு.! இனிமே இந்தியர்களால் கனவில் கூட ஐபோன் வாங்க முடியாது.!
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன்களின் விலை நிர்ணயத்தை அதிகரித்துள்ளது. மொபைல் போன்களின் சுங்க வரியை 15% முதல் 20% வரை உயர்த்துவதாக மோடி அரசாங்கம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐபோன்கள் இதேபோன்றதொரு விலை உயர்வை சந்தித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்கு பின்னர் விலை அதிகரிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த சமீபத்திய விலை உயர்வில் சிக்காத ஒரே ஆப்பிள் கருவி - ஐபோன் எஸ்இ மட்டுமே, ஏனெனில் அது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்த விலையேற்றத்தில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் ஆகிய கருவிகளின் விலை அதிகரித்துள்ளது. இந்த எல்லா கருவிகளிலும் கிட்டத்தட்ட 3% அளவிலாக விலை நிர்ணயம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுள்ள ஐபோன் மாடல்களின் புதிய விலைகள் இன்று முதல் சந்தையில் தொடங்கும். அதாவது, பிப்ரவரி 5, 2018 முதல் தொடங்கும். ஆப்பிள் நிறுவனமும் இந்த விலையேற்றத்தை உறுதி செய்தது மட்டுமின்றி அதன் விற்பனையாளர்களுக்கும் இதை அறிவித்துள்ள...