“இன்னைக்கு இந்த வீட்ல என்னவோ நடக்கப் போகுது” - ஆரூடம் சொல்லும் டேனியல்
‘இன்னைக்கு இந்த வீட்ல என்னவோ நடக்கப் போகுது’ என ஆரூடம் சொல்கிறார் டேனியல்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 நாட்களாக ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், 16 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில், ஜனனி, யாஷிகாவுக்கு இளைஞர்கள் அதற்குள் ஆர்மி ஆரம்பித்துவிட்டனர்.
மும்தாஜை புரமோஷன் வீடியோக்களில் மிகவும் கோபக்காரராகக் காட்டுகின்றனர். ஆனால், நிகழ்ச்சியைப் பார்த்தால் அவர் நியாயமாகவே நடந்து கொள்கிறார்.
கடந்த நான்கு நாட்களாக டாஸ்க் எதுவும் இல்லாமல் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த ‘பிக் பாஸ் 2’ வீட்டில், தற்போது டாஸ்க் ஆரம்பித்துவிட்டது. மும்தாஜ் குழந்தை போல பால் டப்பா மூடியில் இருக்கும் ரப்பரை சப்பியபடியும், அனந்த் வைத்யநாதன் மற்றும் ஷாரிக் இருவரின் கைகளும் ஒரே கயிறில் பிணைக்கப்பட்டும் இருக்கின்றனர். சென்றாயன், யாஷிகா தலையில் வைஷ்ணவி முட்டை உடைக்க, பொன்னம்பலம் மற்றும் நித்யாவை நீச்சல் குளத்துக்குள் பிடித்து தள்ளி விடுகின்றனர்.
இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா தத்தாவுக்கு ஜனனி முத்தம் கொடுக்க, சமைத்துக் கொண்டிருக்கும் மனைவி நித்யாவின் கன்னத்தைப் பிடித்து செல்லமாகக் கிள்ளுகிறார் பாலாஜி. இவற்றைப் பார்க்கும் டேனியல், “எனக்கென்னவோ இன்னைக்கு ஏதோ நடக்கப் போறது மாதிரியே தோணுது” என்கிறார். அப்படி என்னென்ன நடக்கப் போகிறது என்பதை இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பார்க்கலாம்.
Comments
Post a Comment