வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.40 லட்சம் மதிப்பிலான தங்கள் பைக்குகளை, குப்பையில் வீச தொடங்கியுள்ளனர். வெற்று எச்சரிக்கை என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, பைக்குகள் குப்பைக்கு வந்ததன் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம். இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ராயல் என்பீல்டு நிறுவனமானது, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் என்ற மோட்டார் சைக்கிளை, கடந்த வாரம் இந்தியாவில் லான்ச் செய்தது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி முப்படையினரின் சேவையை கௌரவிக்கும் வகையிலான அம்சங்களும், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் இடம்பெற்றுள்...