சமீபத்தில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஜியோ நிறுவனம், அதன்படி ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹோலோகிராப்,விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியா களமிறங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி அவர்கள் தெரிவித்துள்ளார், பின்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மற்றும் வழக்கமாக இந்தியாவில் இருக்கும் விற்பனை முறைகளில் சில்லரை விற்பனை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார் அம்பானி அவர்கள்.
தொழில்நுட்பங்கள்;
      முகேஷ் அம்பானி: மேலும் ரிலையன்ஸ் ரீடெயில் லிமிட்டெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்கள் இணைந்து இந்த இ-காமர்ஸ் திட்டத்தை செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.குறிப்பாக இந்த வால்மார்ட், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றன. தற்போது 32.7 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு, 2022-ம் ஆண்டில் 72 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இ-காமர்ஸ்:
     தொழில்நுட்பங்கள்; ஆன்லைனில் சற்று வித்தியசமாக ஆக்மென்டெட் ரியாலிட்டி, ஹோலோகிராப், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்களோடு ஷாப்பிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக இருக்கும் என்று முகேஷ் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த தொழில்நுட்பம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.ரிலையன்ஸ் கொண்டுவரும் இ-காமர்ஸ் பொறுத்தவரை சிறு வியாபாரிகளுக்கும், பெரும் வணிகம் செய்யும் அளவிற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-காமர்ஸ் துவங்கும் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.

Comments

Popular posts from this blog

Basic Electronics - Types of Transformers

Basic Electronics - MOSFET

சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!