அயர்லாந்துக்கு எதிரான அபார வெற்றி.. இந்தியா படைத்த சாதனைகள்!
இந்திய அயர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் சில சாதனைகளையும் படைத்துள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற வெற்றிகளில் இதுவே அதிகமாகும். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாகும். ஒட்டுமொத்தமாக இது இரண்டாவது பெரிய வெற்றியாகும். இந்திய அணிக்கெதிராக குறைந்த ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றது. அயர்லாந்து 70 ரன்களில் ஆட்டமிழந்தது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து குவித்த 80 ரன்களே சர்வதேச அளவில் இந்திய அணிக்கெதிரான குவிக்கப்பட்ட குறைந்தபட்ச டி20 ஸ்கோர் ஆகும். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 6 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.இவர் தனது முதலாவது டி20 போட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது. தனது முதலாவது டி20 போட்டிக்கும் , இரண்டாவது டி20 போட்டிக்கும் இடையே அவர் 65 போட்டிகளில்...