“இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?” - பாலாஜியைக் குறைகூறும் நித்யா
இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?’ என்று பாலாஜியைப் பற்றி நித்யா குறை கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில், பாலாஜி மற்றும் நித்யாவை வைத்து பிரச்சினை தொடங்கியுள்ளது. கணவன் - மனைவியான இருவரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யாவை பாலாஜி கொலைசெய்ய முயற்சிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களி வைரலானதை நாம் அறிவோம். இந்நிலையில், இருவரையும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் அனுப்பி, அவர்களுக்குள் ஏற்படும் சண்டை மூலம் டிஆர்பியை எகிறவைக்க நினைத்துள்ளது விஜய் டிவி. அதன்படி, முதல் வாரத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது போன்ற புரமோஷன் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறது. ஒரு வெங்காயத்தால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது போல் நேற்றைய புரமோ வீடியோ ஒளிபரப்பானது. ஆனால், நிகழ்ச்சியில் அதுபோன்று எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமாகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் பாலாஜி. இந்நிலையில், இன்றும் அதுபோன்றதொரு புரமோ வீடியோவை ஒளிபரப்பி இருக்கிறது விஜய் டிவி. சற்று முன்பு வெளியான புரமோ வீடியோ...