புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது. மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமை...