கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக் மீது ரூ.2.50 லட்சம் தள்ளுபடி!!
கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்கிற்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதுபற்றிய விபரங்களை இந்த செய்தியில் படிக்கலாம். சூப்பர் பைக் மார்க்கெட்டில் கவாஸாகி இசட்1000 பைக்கிற்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருக்கிறது. ஸ்டைல், செயல்திறன், தொழில்நுட்ப வசதிகள், விலை என அனைத்திலும் தன்னிறைவான மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், கவாஸாகி இசட்1000 பைக்கிற்கு ரூ.2.50 லட்சம் வரை தள்ளுபடி கவாஸாகி டீலர்கள் சிலர் வழங்குகின்றனர். மேலும், 2017ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இசட்1000 பைக்குகளும் இதில் அடங்கும்.
கவாஸாகி இசட்1000 பைக் ரூ.15.10 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த அதிரடி தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தருணமாக இருக்கிறது. இந்த பைக்கை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கவாஸாகி நிறுவனத்தின் டீலர்களை தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளளாம். கவாஸாகி இசட்1000 சூப்பர் பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1043சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 142 எச்பி பவரையும், 111 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும் திறன் கொண்டது.
இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே, கவாஸாகி சூப்பர் பைக்கை தேர்வு செய்ய செல்பவர்களுக்கு இசட்900 பைக்கிற்கும், இசட்1000 பைக்கிற்கும் இடையிலான வித்தியாசத்தை தெரிந்து கொள்வதும் நல்லது. வடிவமைப்பில் அதிக வசீகரமானது இசட்1000 சூப்பர் பைக்.
Add caption |
தொழில்நுட்ப அம்சங்களிலும் பிரிமியம் மாடலாக இருக்கிறது. கவாஸாகி இசட்900 பைக்கில் இருக்கும் எஞ்சின் 125 எச்பி பவரையும், 98.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இசட்900 பைக்கைவிட இசட்1000 பைக் இப்போது தள்ளுபடி விலையில் கிடைப்பதால், வாங்குவது சிறப்பான தேர்வாக அமையும்.
Comments
Post a Comment