புதிய மஹிந்திரா மராஸ்ஸோ Vs டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா: ஒப்பீடு

     பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு வந்துவிட்டது. ரூ.9.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ள மஹிந்திரா மராஸ்ஸோ வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. போட்டியாளரான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பீட்டு பார்வையை இங்கே காணலாம். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 7 சீட்டர் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் தேர்வு பட்டியலில் மஹிந்திரா மராஸ்ஸோ காரும் இடம்பிடித்துள்ளது. பட்ஜெட் அடிப்படையில், மாருதி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகிய இரண்டு கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மராஸ்ஸோ. இந்த நிலையில், இந்த ரகத்தில் அதிக பட்ஜெட் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தீர்வு தரும் வகையில் இந்த செய்தி அமைகிறது. 
        மஹிந்திரா மராஸ்ஸோ - டிசைன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் சுறா மீனை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுறா மீன் பற்கள் போன்ற முகப்பு க்ரோம் க்ரில் அமைப்பு, கண்கள் போன்ற ஹெட்லைட் டிசைன், வலிமையான உடல் அமைப்பு, சுறா வால்பகுதி போன்ற டெயில் லைட் க்ளஸ்ட்டர் என பல இடங்களில் சுறா மீன் உடல் அமைப்பை பிரதிபலிக்கும் அம்சங்கள் இருக்கின்றன. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள், பகல்நேர விளக்குகள், பம்பரில் பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள் உள்ளிட்டவை கவர்ச்சியை அளிக்கின்றன. பக்க்வாட்டில் வலிமையான உடல் அமைப்பை பெற்றிருக்கும் மராஸ்ஸோவிற்கு அழகு சேர்ப்பது 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள். அதேபோன்று, டி பில்லரின் வடிவமைப்பும் வசீகரிக்கிறது. காரின் பிரம்மாண்டத்துக்கு ஏற்றாற்போல் டெயில் லைட் க்ளஸ்ட்டர், வலிமையான பம்பர், டெயில் லைட்டுகளுக்கு இடையிலான க்ரோம் சட்டம் போன்றவையும் இந்த காரின் முக்கிய டிசைன் அம்சங்கள். இன்னோவா க்ரிஸ்ட்டா - டிசைன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டிசைன் வாடிக்கையாளர்களால் போற்றப்படும் ஒன்று என்பது தெரிந்த விஷயம். மிக பிரம்மாண்டமான உடல் தோற்றம், மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட உடல் அமைப்பு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாடிக்கையாளர்கள் மொய்ப்பதற்கு முக்கிய காரணம். முகப்பில் இரண்டு க்ரோம் பட்டைகளுடன் கூடிய பிரம்மாண்டமான க்ரில் அமைப்பு, அசத்தலான ஹெட்லைட் டிசைன், வலிமையான பானட் அமைப்பு என மிக மிக வசீகரமாக இருக்கிறது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் வசீகரத்தை மேலும் கூட்டுகின்றன. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பக்கவாட்டு டிசைனும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. 17 அங்குல அலாய் வீல்கள், க்ரோம் கைப்பிடிகள், வலிமையான பாடி லைன், பெரிய வீல் ஆர்ச்சுகள் என கம்பீரமாக இருக்கிறது. பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டர், ரூஃப் ஸ்பாய்லர், மிக நேர்த்தியான பம்பர் அமைப்பு பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது. டிசைனில் இன்னோவா க்ரிஸ்ட்டாவை மிஞ்ச இன்னொாரு இன்னோவாதான் பிறந்து வரவேண்டும். எனவே, டிசைனில் இன்னோவாதான் சிறந்ததாக இருக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ - இன்டீரியர் மஹிந்திரா மராஸ்ஸோ காரின் இன்டீரியர் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
        கருப்பு மற்றும் க்ரீம் வண்ணத்திலான இரட்டை வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகள், கதவு, உட்புற மேற்கூரை, பாதி டேஷ்போர்டு வரை க்ரீம் வண்ணமும், டேஷ்போர்டின் மேற்புறம் கருப்பு வண்ண பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறை சொல்ல முடியாத அளவுக்கு டேஷ்போர்டு சிறப்பாகவே இருக்கிறது. டேஷ்போர்டு வலதுபுறத்திலிருந்து இடதுபுறமாக சற்றே சரிந்து செல்லும் விதத்தில் இருக்கிறது. இது இன்னோவா க்ரிஸ்ட்டா டேஷ்போர்டின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா - இன்டீரியர் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் இன்டீரியர் மஹிந்திரா மராஸ்ஸோ காரைவிட மிக மிக பிரிமியமாக இருக்கிறது. பழுப்பு மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு வடிவமைப்பிலேயே வாடிக்கையாளர்களை சொக்க வைக்கிறது. வலது பக்கத்திலிருந்து இடதுபுறமாக சரிவாக அமைக்கப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு பிற மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபடுவதுடன் தனித்துவமானதாக இருக்கிறது. 
        டேஷ்போர்டை விட்டு சற்று விலகி அமைக்கப்பட்ட ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கவர்கிறது. அதற்கு கீழாக ஏசி கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மஹிந்திரா மராஸ்ஸோ - வசதிகள் இரண்டு கார்களின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டுகளையே இந்த ஒப்பீட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி, புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலியை சப்போர்ட் செய்யும். இளஞ்சிவப்பு வண்ண பின்னணியுடன் இன்ஸ்ட்ரூமெனட்் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு டயல்களுக்கு நடுவில் காரின் இயக்கத்தை பற்றிய தகவல்களை தரும் மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் நெடுஞ்சாலை பயணத்தில் ஓட்டுனரின் கால்களுக்கு ஓய்வு தரும் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, கடைசி வரிசை இருக்கை வரை ஏசி குளிர்ச்சி பரவும் விதத்திலான புதிய சர்ரவுண்ட் கூல் ரூஃப் ஏசி, க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்கள். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூல்டு க்ளவ் பாக்ஸ் உள்பட அதிக ஸ்டோரேஜ் வசதிகளும் உள்ளன.

Comments

Popular posts from this blog

Basic Electronics - Types of Transformers

Basic Electronics - MOSFET

’பிக் பாஸ் 2’ - நாள் மூன்று: வெங்காயப் பஞ்சாயத்து