ஜூலை 5 புதிய சேவையை அறிமுகம் செய்யும் முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கும் ஏர்டெல்..!

2016 செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனத்தை அறிமுகம் செய்து இந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய விலை போர்-ஐ உருவாக்கிய முகேஷ் அம்பானி தற்போது ஹோம் பிராட்பேண்ட் சந்தையிலும் களமிறங்க உள்ளதால் புதிய போட்டிஉருவாகியுள்ளது. ஏர்டெல் ஏற்கனவே ஜியோவின் மலிவான மொபைல் சேவையுடன் போட்டி போட்டு வரும் நிலையில், ஜியோ ஹோம்பிராட்பேண்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தைக் கலங்க வைத்துள்ளது. அப்படி ஜியோ என்ன சேவை அளிக்கப்போகிறது, இதன் கட்டணங்கள் என்ன..? ஜூலை 5 ஜியோவின் மொபைல் சேவை அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதலே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் fibre-to-the-home சேவையைச் சோதனை செய்யத் துவங்கியது. இதன் படிப்படியான சோதனைகள் முடிந்த உடன் தற்போது ஜூலை 5ஆம்தேதி நடைமுறைக்கு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. வேகம் ஹோம் பிராட்பேண்ட் சேவை தற்போது பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் தர நகரங்களிலும் அதிகளவில்பயன்படுத்துப்பட்டு வருகிறது. 

இணைப்பு
 இதைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மார்ட் டிவி, ஆளுக்கு ஒரு ஸ்மார்ட் போன் எனஇண்டர்நெட் சார்ந்த தொழில்நுட்ப சாதனங்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இதனைக் கருத்தில் கொண்ட ஜியோ தனது ஹோம் பிராட்பேண்ட் சேவையில் சுமார் 100 Mbps வேகத்தில் டேட்டா சேவைஅளிக்கத் திட்டமிட்டுள்ளது.   அளவில்லாத இண்டர்நெட் டேட்டா ஜியோ நிறுவன தரப்பில் இருந்து ரகசியமாகப் பெற்ற தகவல்களில் வைத்து பார்க்கும் போது, ஜியோவின் ஹோம்பிராட்பேண்ட் சேவை ஆரம்பக் கட்டமாக அளவில்லாத இண்டர்நெட் டேட்டா அளிக்கப்படும் எனத் தெரிகிறது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ஆனால் சில மாதங்களுக்குப் பின் குறிப்பிட்ட டேட்டா அளவிற்கு மட்டுமே சேவை அளிக்கும் என்றும், இதனுடன்அன்லிமிடெட் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் சேவையைத் தனது VoIP மூலம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்டணம் முகேஷ் அம்பானி அளிக்கும் இப்புதிய ஹோம் பிராட்பேண்ட் சேவைக்கு மாதம் 1000 -1500 ரூபாய் வரையில் கட்டணம்விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இது சந்தையில் தற்போது இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அளிக்கும் சேவை அளவை விடவும் மிகவும் குறைவானதுஎன்றால் மிகையாகாது.   மீண்டும் இலவசம் டெலிகாம் சேவையில் ஜியோ செய்ததைப் போலவே ஹோம் பிராட்பேண்ட் சேவை அறிமுகத்தில் வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும் என ஒற்றை இலக்கு உடன் சில மாதங்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏர்டெல் ஜியோவின் ஹோம் பிராட்பேண்ட் சேவை அறிமுகம் குறித்த செய்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்ட ஏர்டெல், இந்தியா முழுவதும் தனது பிராட்பேண்ட் சேவையை மறுசீரமைப்புச் செய்து வருகிறது. ஆனால் ஜியோ அறிமுகம்செய்வதோ அதிகவேக பிராட்பேண்ட் இணைப்பு என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் சுனில் மிட்டல் இதுகுறித்து ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் கூறுகையில், சந்தையிலும், சேவை தரத்திலும் தொடர்ந்துநிலைத்திருக்க என்ன செய்ய வேண்டுமே அதைத் தொடர்ந்து செய்து வாடிக்கையாளர் எண்ணிக்கையைத் தொடர்ந்துஅதிகரிக்க உதவுவோம் எனக் கூறியுள்ளார்.
வருவாய்  ஏர்டெல் வாடிக்கையாளர் ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது 25 லட்சம் பிராட்பேண்ட் சேவை வாடிக்கையாளர்கள் உள்ளனர், முகேஷ் அம்பானிதலைமையிலான ஜியோவும் இப்பிரிவு சேவையை அறிமுகம் செய்யும் நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்அதிகளவிலான தள்ளுபடி பெற வாய்ப்புகள் உள்ளது. அதிலும் 6 மாதம் மற்றும் 1 வருட திட்டங்களுக்குக் கூடுதலான தள்ளுபடி கிடைக்கும் எனவும் தெரிகிறது.   சிறப்புத் திட்டம் இந்தப் போட்டியை மையமாகக் கொண்டு ஜியோ அறிமுகத்திற்குப் பின் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்குப் பிராட்பேண்ட் சேவை, டிடிஹெச், மொபைல் சேவை என மூன்றையும் சேர்த்து ஒற்றைச் சேவையாக அளிக்கும் எனத்தெரிகிறது. இதனால் ஏர்டெல் பல வழிகளில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற முடியும்.   வருவாய் ஜியோவின் பிராட்பேண்ட் சேவை அறிமுகத்தால் இத்துறையில் இருக்கும் நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவிலானபாதிப்பை சந்தித்திக்கும் எனத் தெரிகிறது. இதனால் பல நிறுவனங்கள் சந்தையை விட்டு வெளியேறவும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.   இணைப்பு இப்படி வெளியேறும் நிறுவனங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கைப்பற்றும் எனவும் வர்த்தகக் கணிப்புகள்கூறுகிறது. ஏர்டெல் ஏற்கனவே டிக்கோனா 4ஜி வர்த்தகத்தைக் குறிப்பிடத்தக்கது. இதனால் டெலிகாம் சேவை சந்தையில் எப்படிப்பட்ட மாற்றங்களை வந்ததோ அதேபோல் மாற்றம் தான் தற்போதுபிராட்பேண்ட் சேவை சந்தையிலும் இருக்கும் எனத் தெரிகிறது.

Comments

Popular posts from this blog

Basic Electronics - Types of Transformers

Basic Electronics - MOSFET

’பிக் பாஸ் 2’ - நாள் மூன்று: வெங்காயப் பஞ்சாயத்து