“இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?” - பாலாஜியைக் குறைகூறும் நித்யா
இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க?’ என்று பாலாஜியைப் பற்றி நித்யா குறை கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில், பாலாஜி மற்றும் நித்யாவை வைத்து பிரச்சினை தொடங்கியுள்ளது. கணவன் - மனைவியான இருவரும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யாவை பாலாஜி கொலைசெய்ய முயற்சிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களி வைரலானதை நாம் அறிவோம்.
இந்நிலையில், இருவரையும் ‘பிக் பாஸ் 2’ வீட்டுக்குள் அனுப்பி, அவர்களுக்குள் ஏற்படும் சண்டை மூலம் டிஆர்பியை எகிறவைக்க நினைத்துள்ளது விஜய் டிவி. அதன்படி, முதல் வாரத்திலேயே அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது போன்ற புரமோஷன் வீடியோக்களை ஒளிபரப்பி வருகிறது.
ஒரு வெங்காயத்தால் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது போல் நேற்றைய புரமோ வீடியோ ஒளிபரப்பானது. ஆனால், நிகழ்ச்சியில் அதுபோன்று எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமாகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்கிறார் பாலாஜி. இந்நிலையில், இன்றும் அதுபோன்றதொரு புரமோ வீடியோவை ஒளிபரப்பி இருக்கிறது விஜய் டிவி.
சற்று முன்பு வெளியான புரமோ வீடியோவில், நித்யாவிடம் பேசுகிறார் சென்றாயன். “நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த வழியைத்தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன். தனிமை எவ்வளவு நாள்மா?” என்று கேட்கிறார் சென்றாயன்.
“நான் தனியா இருக்கேன்னு யார் சொன்னா? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இது இருக்கும். கன்ட்ரோல் பண்ணாக்க யாருக்குமே பிடிக்காதுல்ல. உங்க தங்கச்சிய, மீடியாவுல போயி ரெண்டு போட்டோ வச்சிகிட்டு, ‘ரெண்டு பேருக்கும் இடையில் தொடர்பு இருக்குனு சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா? இதுவரைக்கும் எந்த ஹஸ்பெண்ட் இப்படி செஞ்சுருக்காங்க? சொல்லுங்க” என்று கேட்கிறார் நித்யா.
அப்போது, “வேணும்... இந்த அவமானம் தேவை” என்று பாலாஜி கூறுவது போலக் காட்டுகிறார்கள். அந்தப் பக்கம், ‘எவ்வளவோ பார்த்துட்டோம், இதைப் பார்க்க மாட்டோமா...” என்கிறார் நித்யா. என்ன நடந்தது என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment