வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்

     ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர்கள், ரூ.2.40 லட்சம் மதிப்பிலான தங்கள் பைக்குகளை, குப்பையில் வீச தொடங்கியுள்ளனர். வெற்று எச்சரிக்கை என எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, பைக்குகள் குப்பைக்கு வந்ததன் மூலம், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை காணலாம். இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ராயல் என்பீல்டு நிறுவனமானது, கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் என்ற மோட்டார் சைக்கிளை, கடந்த வாரம் இந்தியாவில் லான்ச் செய்தது. இந்திய ராணுவத்துடனான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் நீண்ட கால உறவை போற்றும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி முப்படையினரின் சேவையை கௌரவிக்கும் வகையிலான அம்சங்களும், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களில் இடம்பெற்றுள்ளன. 
வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால் நேர்ந்த கதி.. குப்பைக்கு வர தொடங்கிய ராயல் என்பீல்டு பைக்குகள்
      இதுதவிர ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் எனப்படும் ஏபிஎஸ் வசதி, இந்த மோட்டார் சைக்கிள்களில் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனமானது, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் தனது மோட்டார் சைக்கிள்களில், ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கி வருகிறது. எனினும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களில் ஏபிஎஸ் வசதி கிடையாது. அந்த குறையை நிவர்த்தி செய்த முதல் மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் பெறுகிறது. ஆம், ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமான முதல் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள், கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன்தான். 
          பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாய் மட்டுமே. அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளையும் ராயல் என்பீல்டு உடனடியாக தொடங்கி விட்டது. இந்த சம்பவங்கள் எல்லாம், ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களானது, இரண்டாம் உலகப்போர் எடிசன் பைக்குகள் என குறிப்பிடப்படுகின்றன. இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலகட்டத்தில், இங்கிலாந்து நாட்டிற்காக, WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் உற்பத்தி செய்தது. இங்கிலாந்து நாட்டு படை வீரர்கள், போர் முனையில், WD/RE 125 மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தினர்.

Comments

Popular posts from this blog

Basic Electronics - MOSFET

Basic Electronics - Types of Transformers

BitTorrent launches uTorrent Web for simple torrenting experience