சுஸூகி வி- ஸ்ட்ரோம் 650 பைக் விரைவில் இந்தியா வருகிறது!!
இருசக்கர வாகன உலகில் தனக்கென தனிப்பட்ட செயல் திறனை கொண்டு முத்திரை பதித்து வரும் சுசூகி நிறுவனம் தனது புதிய சுசூகி வி- ஸ்ட்ரோம் 650 (SUZUKI V STORM 650) என்ற பைக்கை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாய் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுசூகி பிரியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் முன்பதிவுகள் சுசூகி நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றன. இந்த இளரக வாகனமான சுசூகி V ஸ்டார்ம் 650 முன்னணி ஆட்டோமொபைல் வலைதளத்தால் அடுத்த மாதம் வெளிவரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை முன்பதிவு செய்ய விரும்புவோர் வெறும் 50,000 ருபாய் மட்டுமே செலுத்தி உங்களுக்கான பதிவை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இதன் ஆரம்பவில்லை எப்படியும் ஏழு லட்சத்தை எட்டும் என்று அந்நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாகனத்தின் போட்டியான கவாசகி வெர்ஸிஸ் 650 (KAWASAKI VERSYS 650) வாகனத்தை விட குறைந்தது என்பதால் அதனை மிஞ்சிய விற்பனை பெரும் என்பது நிறுவனத்தின் நம்பிக்கை. GSX S750 மற்றும் ஹயபுஸா சூப்பர் பைக்குகளை தொடர்ந்து இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கும் மூன்றாவது உயர்ரக சுஸுகி பைக் இதுவாகும். உலகெங்கும் உள்ள சுசூகி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை நிலையங்களில் இந்த வாகனம் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது அவை ஸ்டாண்டர்ட் மற்றும் XT .
ஸ்டாண்டர்ட் வாகனமானது சாதாரண பயணத்திற்கும் , சாலைகளுக்கும் ஏற்ற வடிவம், செயல் திறன் பெற்றிருக்கும், XT வாகனம், ஆப் ரோடு எனப்படும் சாகசங்கள், பந்தயங்கள் போன்றவற்றிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் முன்பதிவினை நீங்கள் ஸ்டாண்டர்ட் வாகனத்திற்கு மட்டுமே பெறலாம் என்பது சற்றே கவலைக்கு உரிய விஷயம். இந்த வாகனம் இதன் உடன்பிறப்பான V ஸ்ட்ரோம் 1000 (V STORM 1000) கட்டுமான தொழில்நுட்பத்தை சார்ந்தே இது இருக்கும் என்பது கூடுதல் தகவல்.
Comments
Post a Comment