வாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மக்கள் விரும்பும்படி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம். ஜியோ நிறுவனம் தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலி உடன் புதிய ஜியோ போன் மாடலை மலிவு விலையுடன் மும்பையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஜியோ போன் 2-வை ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீபோர்டு கூடிய அம்சத்துடன் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் 2 சாதனத்தின் விற்பனை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஜியோபோன்.

Comments
Post a Comment